About Author

Vidya Vinaya Sampannaha


Knowledge gives Wisdom.

Our great Seers/ Rshis have given us Ambrosia in the form of Itihasams, Puranas Etc.

It will be a delight to know, how they have covered wide gamut of subjects like Scientific thoughts, management science, Defense strategies, Astronomy, the ways to lead a righteous life and many more things in a simpler form.

This website is just an attempt to share a tiny bit from the vast ocean of knowledge. This collection may interest young and old.

I should thank my family for all the support in bringing out this website.



பாலசுப்ரமணியன் எனும் நான் பிறந்தது தமிழகத்தின் தலைநகரான தருமமிகு சென்னையில்.

சிறு பிராயம் முதல், நான் ஒரு கண்டிப்பான சூழ்நிலயில், ஆசாரமான பின்னணியில் வளர்ந்தேன்.

அதனால் என்னுடைய வாலிப வயதில் என்னைச் சுற்றியுள்ள நண்பர்கள் என்னை விட சுதந்திரமாக உள்ளனர் என் நினைத்தேன்.

அதனால் நம் மதம் ஒரு " rituualistic religion" எனவே நினைத்து வந்தேன். நம் ஆசாரங்களை வெறுத்தேன்.

என்னுடைய மாற்றம் பெற்றோர்களுக்கு மனவருத்தத்தை அளித்தது.

ஓரு முறை அவர்களின் வற்புறுத்தலின் பேரில், அப்போது சென்னயில் முகாமிட்டிருந்த மஹாபெரியவரை தரிசனம் செய்யச் சென்றேன்.

அன்று பல ஆன்றோர்கள் மஹாபெரியவரின் உபன்யாசம் கேட்க வந்திருந்தனர்.

கூட்டம் அமைதியான பிறகே அவர் பேச ஆரம்பித்தார்.

சபையோரை நோக்கி " Infinite" என்றால் என்ன என்று கேட்டார்கள்.

படித்த பலர், விஞ்ஞான பூர்வமாக அதை விளக்கினர்

நிதானமாக எல்லோரும் கூறியதைக் கேட்டார்.

பிறகு அவர் அவருக்கே உரிய பாணியில் " நீங்கள்ளெல்லாம் சொல்லிட்டேள்,.எனக்கு தெரிஞ்சதைச் சொல்லட்டுமா?? "

விஷ்ணு, சிவன் இருவரையும் நமக்குத் தெரியும். ஒத்தர் மஹாசெல்வந்தன், மற்றொருவரோ பிக்ஷாண்டி.

விஷ்ணுவின் மார்பிலோ லக்ஷ்மி குடிகொண்டிருக்கா, செல்வத்தின் அதிபதி. அவ்ள் சொத்தை அளவிடமுடியுமா????

அளவிடமுடியாதது. " Infinite"!!!!!!!!

நம்ம பிக்ஷாண்டிக் கிட்ட என்ன இருக்கு?? இருக்க இடம் ஸ்மசானம், வைத்திருப்பது-- மண்டை ஓடு, சாம்பல் உடல் பூரா பூசிண்டிருகார்.

இதுக்கெல்லாம் விலை போடமுடியுமா????? ஆக அதுவும் "infinite"--அளவிடமுடியாதது.

இரண்டுமே அளவிடமுடியாதது-- : " Infinite" !!!!!!!!!!!!பி

அன்று என் கண் முன் ஒரு"infinite form of knowledge"--என்னெதிரே கண்டேன்.

கடவுளையும் தாண்டி, நம் மதத்தில் அறிந்த கொள்ளவேண்டிய பல விஷயங்கள் உள்ளன என என் மனதில் ஆழப் பதிந்து.

அன்று ஆரம்பித்தது இந்த " காவியத் தேடல்"!!!!!!!!!!!!

என் படிப்பு, வேலை, குடும்பம் என்ற சுழற்சிசியில் பல ஆண்டுகள் சென்றன.

நான் ஒரு"chemical engineer by profession".

நம் நாட்டிலும், வெளிநாடுகளிலும் பணி புரிந்துள்ளேன்.

ஆனாலும் என்னுடைய தேடல் மனதில் ஸ்திரமாக இருந்தது.

அடையார் குப்புசுவாமி அய்யர் நூலகத்தில் உறுப்பினரானேன்.

அங்கு தான் பற்பல விஷயங்களைச் சேகரித்தேன்.

நான் இதன் மூலம் அறிந்தது-- நம் மதத்தைப் பற்றி அறிய, ஒரு பிறவி போதாது என்பதே-- இந்த தேடல் ஒரு"Continuous process"!!!!!!!

என் தேடல் தீவிரமடைந்தது. நூலகத்தில் உதவி செய்த மறைந்த திரு லக்ஷ்மணனை என்னால் மறக்கவே முடியாது. அவர் தான் பல நூல்களைப் படிக்க உதவினார்.

அதில் பல பாஷ்யங்கள் , உரைகள், சிறு சிறு கட்டுரைகள் என்னைக் கவர்ந்தது. " வெட்டம் மணி" அவர்களின் களஞ்சியம் மிகப் பெரிய பொக்கிஷம்..அது தான் எனது மூலம்..அதிலிருந்து பல விஷயங்களை நான் சேகரித்தேன்..

பிறகு பல நூல்கள். பாஷயங்கள், புராணங்கள் எனது காவ்ய தேடலுக்கு உதவின. இதற்கிடயில் நான் பொறியாளார் என்பதால் ஒரு சிறு முயற்ச்சியாக ஒரு புத்தகம் வெளியிட்டேன்.

அதன் பெயர் "Modern Science and Veda Sastras" .சுரா பதிப்பாளர் திரு சுப்பராசு அதை வெளியிட்டார். அவருக்கு எனது நன்றி.அவரை என்னால் மறக்கமுடியாது. மிகப் பெரிய அறிவாளி.

என்னுடைய நோக்கம் புத்தகம் வெளியிட்டு காசோ, புகழோ சம்பாதிக்கும் எண்ணம் அல்ல.

நான் அனுபவித்ததை வளர்ந்து வரும், இளைஞ்ர் சமுதாயும் உணரவேண்டும், அனுபவிக்கவேண்டும் என்பதே லக்ஷியம்.

பிறகு நான் தேடிய இந்த் சிறிய முத்து சிதறல்களை இணய தளம் மூலம் படைக்க விரும்பினேன்.

எல்லாப் புராணங்களின் கதைகளைப் படித்தேன். நன்றி அடையார் நூலகம்.

ஆக பற்பல் நூல்களிலிருந்து தொகுத்ததே இந்த " தமிழ் காவியத் தேடல்"

நான் இந்த முயற்ச்சின் " படைப்பாளி" அல்ல. வெறும் " தொகுப்பாளியே"

வெட்டம் மணி போன்ற பல சிந்தனையார்களின் தொகுப்பே இந்த " தமிழ் காவியத் தேடல்".

இந்த முயற்ச்சில் நான் இறங்கியதற்கு மற்றோர் காரணம் பலர் என்னிடம் கேட்டக் கேள்வி--" Nothing is documented in hindu religion".

அவர்கள் முழுமையாக எதையும் படிக்கவில்லை. In our religion every thing is nicely documented."

யாரும் அதைத் தேடவில்லை. ஆசாரமே நமது மதம் என நினைத்தனர். தவறு!!! அசிங்கம் என்பதைக் கூட நம் மதம் தைரியமாகக் கூறுகிறது

இந்த " காவியத் தேடல்" வளர்ந்து வரும் சமுதாயத்திற்கும், வரப் போகும் சமுதாயத்திற்க்கும் இது ஒரு வழிக் காட்டியாகும்.

இந்த தேடலை வரப் போகும் சமூதாயுமும் தொடர வேண்டுமென இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

தேடல் தொடரும். அதில் நீங்களும் பங்குபெறலாம்.

நன்றி.

இந்த தேடலுக்கு உயிர் அளித்த என் அண்ணன் அனந்தநாராயணன், மன்னி பானு அவர்களுக்கும்

அவர்களின் புதல்வன் அசோக் சேஷன் , அவரின் மனைவி சுமித்ரா மற்றும் இதை உருவாக்கிய திரு.கோபாலகிருஷ்ணன், அவரின் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றி.